ரஷ்யாவின் மிரட்டல் ஒரு பொருட்டல்ல... தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்கிய உக்ரைன்
உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஏற்றுமதியை விரிவுபடுத்தும் நோக்கில், குரோஷிய துறைமுகங்கள் வழியாக தானியங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது உக்ரைன்.
ரஷ்யாவின் மிரட்டல் பொருட்டல்ல
பொதுவாக கருங்கடல் துறைமுகங்கள் ஊடாகவே உக்ரைன் இது நாள் வரையில் தானிய ஏற்றுமதி முன்னெடுத்து வந்தது. ஆனால் ரஷ்யா படையெடுப்பை அடுத்து, மாற்று வழி ஒன்றை உறுதி செய்ய உக்ரைன் நடவடிக்கை முன்னெடுத்து வருகிறது.
@reuters
மட்டுமின்றி ஜூலை மத்தியில் கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய நிலையில், உக்ரைன் இந்த முடிவுக்கு வந்தது. உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமித்ரோ குலேபா ஜூலை இறுதியில் ஜாக்ரெப் விஜயத்தின் போது தெரிவிக்கையில்,
ரஷ்யாவின் மிரட்டல் தங்களுக்கு ஒரு பொருட்டல்ல எனவும் உக்ரேனிய தானிய ஏற்றுமதிக்கு டானூப் மற்றும் அட்ரியாடிக் கடலில் உள்ள குரோஷிய துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து உக்ரைனும் குரோஷியாவும் இறுதி முடிவுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
முக்கிய வர்த்தக பாதை
உக்ரேனிய தானியங்கள் ஏற்கனவே குரோஷிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த சாத்தியத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது ஒரு முக்கிய வர்த்தக பாதை என்றாலும், இது ஏற்கனவே பிரபலமாக உள்ளது என தெரிவித்துள்ளார் உக்ரைனின் முதல் துணைப் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ.
@reuters
ஆனால் குரோஷிய துறைமுகங்கள் வழியாக ஏற்கனவே எவ்வளவு உக்ரேனிய தானியங்கள் அனுப்பப்பட்டன என்று அவர் குறிப்பிடவில்லை. இதனிடையே உக்ரேனிய வர்த்தக சங்கம் தெரிவிக்கையில், 2023ல் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் அறுவடை 80.5 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டும் எனவும்
2023/24 ஜூலை-ஜூன் பருவத்தில் சுமார் 49 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், செப்டம்பர் 1ம் திகதி நிலவரப்படி மொத்தம் 4.5 மில்லியன் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக உக்ரைன் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |