ரஷ்யாவுக்கு எதிரான போர்: முன்கள வரிசைக்கு பெண் சிறைக் கைதிகளை அனுப்பும் உக்ரைன்
பெண் கைதிகளை ராணுவத்தில் இணைத்து ரஷ்யாவுக்கு எதிரான போரின் முன்கள வரிசையில் சண்டையிட வைக்க உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
உக்ரைன் ராணுவத்தில் பெண் கைதிகள்
உக்ரைனிய இராணுவத்தின் தளவாட மற்றும் ஆள்சேர்ப்பு உத்தியில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் முன்கள தாக்குதலுக்கு தேவையான ஆட்களின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக உக்ரைனிய சிறையில் இருக்கும் பெண் கைதிகளை ராணுவத்தில் தன்னார்வலர்களாக சேர்க்கும் நடைமுறைக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இந்த சட்ட திருத்தமானது, சிறையில் இருக்கும் பெண் கைதிகள் தங்களது தண்டனை காலத்தை குறைத்து தங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள உதவும் மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உக்ரைனிய ராணுவத்தில் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர்.

இன்னும் பல பெண்கள் தங்களை இராணுவத்தில் தன்னார்வலர்களாக சேர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பித்து அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.
இவ்வாறு ராணுவத்தில் சேரும் பெண்கள் ரஷ்யாவுக்கு எதிரான போர் நிறைவடையும் வரை முன்கள வரிசையில் சண்டையிட உறுதியளித்துள்ளனர். இதன் மூல இவர்களின் தண்டனை காலம் குறைக்கப்படும்.
இந்த குறிப்பிட்ட பெண்கள் ராணுவ படையை கண்காணிக்கும் இராணுவ தளபதிகள், பெண் வீரர்கள் சிறப்பாக தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |