ரஷ்ய படையெடுப்பு பற்றிய ஆவணப்படத்தை எடுக்கவுள்ள உக்ரைனிய இயக்குநர்!
உக்ரேனிய திரைப்பட தயாரிப்பாளர் ரஷ்ய படையெடுப்பு பற்றிய ஆவணப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
உக்ரேனிய திரைப்பட இயக்குனர் செர்ஜி லோஸ்னிட்சா (Sergei Loznitsa) தனது நாட்டில் நடக்கும் போரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
திங்களன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது "தி நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் டிஸ்ட்ரஸ்ட்ரக்ஷன்" திரைப்படத்தை திரையிட்டபோது, இந்த ஆவணப்படம் பற்றிய அறிவிப்பை அவர் கூறினார்.
இதையும் படிங்க: டவுனிங் ஸ்ட்ரீட்டில் போரிஸ் ஜான்சன் மது அருந்திய புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு!
அப்போது பேசிய அவர், "போர் தொடங்கியதிலிருந்து நான் இன்னும் உக்ரைனுக்குத் திரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக நான் அங்கு செல்ல விரும்புகிறேன், இந்த நேரத்தில் நடக்கும் அந்த அட்டூழியங்களைப் பற்றி ஒரு திரைப்படத்தை உருவாக்க உத்தேசித்துள்ளேன்" என்று கூறினார்.
தற்போது அவர் லிதுவேனியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லோஸ்னிட்சா கேன்ஸில் எட்டு முறை பங்கேற்றுள்ளார்.
2012 கேன்ஸ் திரைப்பட விழாவில் அவரது "இன் தி ஃபாக்" திரைப்படம் கேன்ஸின் உயரிய திரைப்பட விருதான பாம் டி'ஓருக்கு போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.