நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்: வீடியோ காட்சி!
ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் நான்கு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இரண்டாம் உலக போருக்கு பிறகு ராணுவ அணிதிரட்டலை அறிவித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்.
ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் நான்கு போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றை உக்ரைன் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் இரு நாடுகளும் தங்களது இலக்குகளில் தீவிரமாக இருந்து வருவதால், போர் நடவடிக்கை 7 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Yesterday, the Armed Forces of #Ukraine shot down 4 planes and one helicopter of the invaders. pic.twitter.com/CVK5PPs2cP
— NEXTA (@nexta_tv) September 25, 2022
உக்ரைனிய படைகளின் சமீபத்திய எதிர்ப்பு தாக்குதலால், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பொது மக்கள் குடியிருப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படையினர் இந்த பின்னடைவால் ரஷ்ய ஜனாதிபதி புடின், இரண்டாம் உலக போருக்கு பிறகு முதல் முறையாக படை அணி சேர்ப்பை ரஷ்யாவில் அறிவித்தார்.
இந்நிலையில் உக்ரைனிய பகுதியில் நேற்று அத்துமீறி நுழைந்த ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் நான்கு போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றை உக்ரைனிய ஆயுதப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ஹரி மற்றும் மேகனுக்காக கண்ணீர் விட்டு கதறிய அரச உதவியாளர்கள்: திட்டம் முன் தீர்மானிக்கப்பட்டது என தகவல்
இது தொடர்பாக வெளிவந்துள்ள வீடியோவில் உக்ரைனிய வான்பரப்பில் பறந்த ரஷ்ய போர் விமானம் ஒன்று உக்ரைனிய ஆயுத படை நடத்திய தாக்குதலில் சுடப்பட்டு நெருப்பு தரையில் வீழ்வது தெரியவந்துள்ளது.