சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் மூன்று Su-34 போர் விமானங்கள்: பெரும் பின்னடைவில் ரஷ்யா!
உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் Su-34 போர் குண்டு வீசும் விமானங்கள் மூன்றை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்
ரஷ்யா, தெற்கு கெர்சன் பகுதியில், குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த Su-34 ரக குண்டு வீச்சு விமானங்களைப்(Russian Su-34 fighter-bombers) பயன்படுத்தி வந்தது, ஆனால் ரஷ்யா தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 29ம் திகதி ரஷ்யாவின் மூன்று Su-34 போர் குண்டு வீசும் விமானங்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் ராணுவத் தலைவர் ஜெனரல் ஓலெக்சாண்ட்ர் சிர்கிஸின்(Oleksandr Syrskyi) கூற்றுப்படி, பிப்ரவரி 29 ஆம் தேதி Avdiivka மற்றும் Mariupol பிரிவுகளில் இந்த சுட்டு வீழ்த்துதல் நிகழ்ந்தது.
Su-34 போர் விமானம், "பிளாட்டிபஸ்" (Platypus) என நேட்டோ (NATO) அழைக்கிறது, இது அதன் நீண்ட தூரம் மற்றும் கனரக ஆயுத பாணிக்கு பெயர் பெற்றது.
மேற்கத்தேய நட்பு நாடுகளிடமிருந்து மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றதிலிருந்து, உக்ரைன் தனது வான் பாதுகாப்பு திறனை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, முன்னணி பகுதிகளில் ரஷ்ய விமானங்களை எதிர்கொள்ளும் திறன் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |