ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி
தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளது.
உக்ரைன் கடற்படை
உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் தாக்கிச் சிதைத்ததைத் தொடர்ந்து, எஞ்சியிருக்கும் சொற்ப அளவு பெட்ரோலைப் பெறுவதற்காகத் தவிக்கும் ரஷ்யர்களிடையே மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் சமீபத்திய தாக்குதலால், ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவிற்கு மேற்கே உள்ள ரஷ்யத் துறைமுகமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) கடல் பகுதியில், புடின் தனது 'எமரால்டு' பாதுகாப்புப் படை ரோந்து கப்பலை இழந்தார்.
புதிய மற்றும் இரகசியமான சர்கன்-3000 கடல் ட்ரோன் மூலம் 205 அடி நீளமுள்ள ரஷ்ய கப்பல் செவ்வாய்க்கிழமை மூழ்கடிக்கப்பட்டதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, 'எமரால்டு' கப்பலின் பணியாளர்கள் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டிருந்ததையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டில் கெர்ச் நீரிணையில் மூன்று கடற்படைக் கப்பல்களைக் கைப்பற்றியதன் மூலம் இந்தக் கப்பலை உக்ரைன் நீண்டக காலமாக இலக்கு வைத்து வந்துள்ளது.
எமரால்டு கப்பலின் குழுவினர், உக்ரேனிய இழுவை கப்பலான 'யானி கபு' (Yany Kapu) மீது மோதியதாகவும், அப்படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், சுமார் 24 மாலுமிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இன்று 'எமரால்டு' கப்பலைத் பழிவாங்கும் நோக்கில் தாக்கிய 'சர்கன்-3000' நீண்ட தூரக் கடற்படைத் தாக்குதல் பணிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரோன் ஆகும்.

எரிபொருள் பற்றாக்குறை
எண்ணெய் கப்பல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீதான முந்தைய தாக்குதல்களால் பெட்ரோல் இருப்பு குறைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ளவற்றைப் பெறுவதற்காக ரஷ்யர்கள் போராடும் சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
சாரதிகள் எரிபொருள் நிரப்பச் செல்லும்போது பாதுகாப்பிற்காக கத்திகளை உடன் எடுத்துச் செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரஷ்யா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து வருவதால், நாடு முழுவதும் தேவைக்கு அதிகமாக எரிபொருள் வாங்குவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏற்றுமதியும் முடங்கியுள்ளது; இதனால், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட எரிபொருள் விற்பனை மூலம் ரஷ்யாவிற்குக் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை விவசாயிகளைப் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அறுவடைக்கும் கடுமையான நெருக்கடி ஏற்படும் சூழலை புடின் எதிர்கொள்கிறார்.
இதனிடையே, கம்பைன் ஹார்வெஸ்டர்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ரஷ்யாவின் தெற்குப் பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |