உக்ரைன் ஒரு தொடக்கம் மட்டுமே... புடின் தொடர்பில் எச்சரிக்கும் சேன்ஸலர் மெர்ஸ்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஏகாதிபத்திய திட்டம் உக்ரைனைக் கைப்பற்றுவதோடு முடிவடையாது என ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதல்
உக்ரைன் மீதான படையெடுப்பு ஒரு தொடக்கம் மட்டுமே என்றும் மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியின் தூதர்கள் மாநாட்டில் பேசிய சேன்ஸலர் மெர்ஸ், நமது உள்கட்டமைப்பு உட்பட, அதிகரித்து வரும் இருதரப்பு ரஷ்ய தாக்குதல்களை நாம் தினமும் அனுபவித்து வருகிறோம் என்றார்.
அத்துடன் வடக்கு மற்றும் பால்டிக் கடல்களில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2022 ல் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜேர்மனி உள்ளது.
மெர்ஸ் நடவடிக்கை
இதனாலையே, ரஷ்யாவில் இருந்து இயக்கப்படும் நாசவேலை சதித்திட்டங்கள் குறித்து எச்சரிக்கை நிலையிலும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அட்லாண்டிக் கூட்டணியின் எதிர்கால வலிமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,
ஜேர்மனியின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க மெர்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார். மட்டுமின்றி, ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை ஜேர்மனி கொண்டிருக்க வேண்டும் என்றும் மெர்ஸ் விரும்புகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |