உக்ரேனிய தாக்குதலில் பொதுமக்கள் பலி! பயங்கரவாத விசாரணையை தொடங்கிய ரஷ்யா
குர்ஸ்க் பகுதியில் உக்ரேனிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
ஏவுகணை தாக்குதல்
தென்மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்கா வழங்கிய ATACMS ஏவுகணைகளைக் கொண்டு, தங்கள் இராணுவ தளங்களை உக்ரைன் குறிவைத்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியது.
மேலும் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதாக, பெரிய குற்றங்களை விசாரிக்கும் ரஷ்யாவின் விசாரணைக்குழுவின் ராணுவப்பிரிவு கூறியது.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, உக்ரைன் 3 தந்திரோபாய ஏவுகணைகளை Bolshoye Zhirovo கிராமத்தில் வீசியது. இதனை பயங்கரவாத செயல் என்று அவர்கள் வர்ணித்தனர்.
பயங்கரவாத விசாரணை
இதனையடுத்து பயங்கரவாத விசாரணையைத் தொடங்கியதாக ரஷ்ய ராணுவப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், "இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட உக்ரைனின் ஆயுதக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் கீழ் பொறுப்புக் கூறப்படுவார்கள்" என்றனர்.
இதற்கிடையில், vostochny விமான தளத்தின் வடமேற்கில் நடத்தப்பட்ட ATACMS தாக்குதல்களில் இரண்டு படைவீரர்கள் காயமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |