ரஷ்யாவின் துருஷ்பா எண்ணெய் குழாய் மீது உக்ரைன் தாக்குதல்: ஐரோப்பிய நாடுகளுக்கான விநியோகத்தில் சிக்கல்?
உக்ரைனிய படைகள் ரஷ்யாவின் எண்ணெய் குழாயை குறிவைத்து தாக்கி இருப்பதாக அந்நாட்டின் உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் குழாய் மீது தாக்குதல்
ரஷ்ய எல்லைக்குள் அமைந்துள்ள துருஷ்பா(Druzhba) என்ற எண்ணெய் குழாயை உக்ரைனிய பாதுகாப்பு படை குறிவைத்து தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி இருப்பதாக உக்ரின்ஃபார்ம்(Ukrinform) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலானது, குடியிருப்பு பகுதிகள் நிறைந்த காசின்ஸ்கி வைசில்கி(Kazynski Vysilky) அருகில் நடந்து இருப்பதாகவும், டாகன்ரோக்-லிபெட்ஸ்க் பிரிவை குறிவைத்து தாக்கி இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை வழங்கிய தகவலில், இதில், தொலைவில் இருந்து செயல்படுத்தப்படும் வெடிபொருள் மற்றும் வெடிப்பின் திறன்களை அதிகப்படுத்தக் கூடிய சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் துருஷ்பா(Druzhba) எண்ணெய் குழாய் மீது இந்த ஆண்டு உக்ரைன் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
துருஷ்பா(Druzhba) எண்ணெய் குழாய் ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய எண்ணெயை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |