ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட முக்கிய நகரங்கள்
ரஷ்யாவின் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் மிகப்பெரிய பால்டிக் கடல் எண்ணெய் உள்கட்டமைப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சமீபத்திய மாதங்களில் நடந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த வான்வழித் தாக்குதலில் லெனின்கிராட் பகுதியில் உள்ள பிரைமோர்ஸ்க் துறைமுகத்தை உக்ரைன் தாக்கியுள்ளது.
இந்த எண்ணெய் துறைமுகத்தை ரஷ்யா சர்வதேச தடைகளை தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் நிழல் கடற்படையின் முக்கிய பகுதியாக பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இரவோடு இரவாக ரஷ்யா 221 டிரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் ரஷ்யாவில் பல நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அமைச்சகத்தின் படி, பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் 92 டிரோன்களும், ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் 42 டிரோன்களும் அதிகபட்சமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |