உக்ரைனில் இருந்து திரும்பிய மகனை முத்தமிட்டு வரவேற்ற தாயார்! நெகிழ்ச்சி புகைப்படம்
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மகனை அவன் தாயார் முத்தமிட்டு வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் நான்காவது நாளாக போர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நாட்டின் இரண்டவது பிரபலமான நகரான Kharkivல் ரஷ்ய துருப்புகள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வேறு நாட்டை சேர்ந்த பலர் உக்ரைனில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகளின் அரசுகள் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த பலர் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சகீர் என்ற மாணவர் ஒருவர் உக்ரைனில் சிக்கிய நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவர் தனது இல்லத்துக்கு வருகை தந்தார்.
சகீரை அவர் தாயார் முத்தமிட்டு வரவேற்றார். மேலும் குடும்பத்தாரும், அப்பகுதியை சேர்ந்தவர்களும் சகீரை வரவேற்றனர்.