பிரான்சிடமிருந்து 100 ரஃபேல் போர் விமானங்களை வாங்க உக்ரைன் திட்டம்
பிரான்சிடமிருந்து 100 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டுள்ளது.
இந்த வரலாற்று ஓப்பந்தம், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இடையே, பாரிஸ் அருகிலுள்ள Villacoublay விமான தளத்தில் கையெழுத்தானது.
பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, உக்ரைன், பிரான்ஸ் தயாரிக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது.
ஆனால், ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு பிறகு, இது அவரது ஒன்பதாவது பாரிஸ் பயணமாகும்.
அவர் தனது X பக்கத்தில், "பிரான்சுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையழுத்தாக உள்ளது. இது உக்ரைனின் வான்வழி பாதுகாப்பையும், போர் திறனையும் வலுப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.
திங்கட்கிழமை (நவம்பர் 17) காலை, இரு தலைவர்களும் விமான தளத்தை பார்வையிட்டதுடன், பின்னர், 'Coalition of the willing' எனப்படும் பன்னாட்டு படைத்தள தலைமையகத்திற்கு சென்றனர்.
இந்தக் கூட்டணியில், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தலைமையில், 30-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து, எதிர்காலத்தில் உக்ரைனில் சமாதான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
இதற்கு முன் உக்ரைன், அமெரிக்காவின் F-16, பிரான்சின் Mirage போர் விமானங்களை பெற்றுள்ளது.
மேலும் கடந்த மாதம் ஸ்வீடனிடமிருந்து 150 Gripen ஜெட் விமானங்களை வாங்கும் வாய்ப்பை ஆராயும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தற்போது பிரான்சுடனான இந்த புதிய ஒப்பந்தம், உக்ரைனின் வான்வழி பாதுகாப்பு திறனை பெரிதும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine Rafale fighter jets deal France, Zelensky Macron Rafale agreement Paris, Ukraine combat aviation upgrade Rafale, France Ukraine defense cooperation 2025, Rafale jets Ukraine air defense boost, Ukraine military modernization Rafale jets, Coalition of the willing France UK Ukraine, Ukraine F-16 Mirage Rafale fighter fleet, Ukraine Sweden Gripen jets purchase plan, Ukraine Russia war air defense strategy