ரஷ்யா படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விரட்டுங்கள்! மக்களை தூண்டிவிடும் உக்ரைன்
உக்ரைன் தலைநகர் Kyiv-க்குள் ஊடுருவும் ரஷ்யா படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுமாறு பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யா படைகளை தலைநகர் kyiv-க்குள் நுழைய விடாமல் உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, kyiv-வின் Obolon மாவட்டத்திற்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளனர். இந்த மாவட்டம் மத்திய kyiv-வில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளது.
இந்நிலையில், தலைநகருக்குள் ஊடுருவும் ரஷ்ய படைகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, அவர்களை தடுக்குமாறு உக்ரைன பாதுகாப்பு அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.
மேலும், kyiv குடியிருப்பாளர்கள் ஜாக்கிரதையாக இருக்கும் படியும், வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
❗️увага
— Defence of Ukraine (@DefenceU) February 25, 2022
На Оболоні ворожа ДРГ.
Просимо громадян повідомляти про пересування техніки!
Виготовляти коктейлі «Молотова», знешкоджувати окупанта!
Мирним мешканцям - бути обережними! Не покидати оселі!