உக்ரைனின் கொடூர திட்டத்தை ஒரு நொடியில் முறியடித்த எலான் மஸ்க்: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் சக்தி வாய்ந்த ட்ரோன் தாக்குதலுக்கு எலான் மஸ்க் தமது Starlink சேவையை பயன்படுத்த மறுத்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது.
போருக்கு பயன்படுத்துவதில்
எலான் மஸ்கின் Starlink வசதியை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தியிருந்தால். கொடூரமான பழி வாங்கலுக்கு இலக்காக நேரலாம் என அவர் அஞ்சியதாகவும் கூறப்படுகிறது.
Image: Maxar Technologies
தொடர்புடைய சம்பவத்தை எலான் மஸ்க் நேரிடையாகவே வெளிப்படுத்தியுள்ளார். தமது Starlink சேவையை போருக்கு பயன்படுத்துவதில் தமக்கு உடன்பாடில்லை எனவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
கிரிமியா பகுதியில் நங்கூரமிட்டிருந்த ரஷ்ய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் எலான் மஸ்கின் உதவியை நாடியுள்ளது. அவரது Starlink சேவையை பயன்படுத்தி ட்ரோன் தாக்குதலை முன்னெடுக்கவே உக்ரைன் திட்டமிட்டிருந்தது.
மரணத்திற்கு வழிவகுத்தது
ஆனால் அப்படியான தாக்குதலுக்கு தாம் அனுமதி அளிக்க முடியாது எனவும் போர்ச் செயலில் உடந்தையாக இருக்க விரும்பவில்லை எனவும் மஸ்க் பதிலளித்துள்ளார். அத்துடன் உக்ரைனின் தாக்குதல் கண்டிப்பாக தீவிர பதிலடியை வரவழைக்கும் எனவும் அது அணுசக்தி தாக்குதலாக இருக்கலாம் எனவும் எலாம் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
@getty
இதனாலையே உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்ததாக மஸ்க் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிரிமியன் கடற்கரையிலிருந்து 100 கிலோமீற்றருக்குள் Starlink சேவையை முடக்குமாறு தனது பொறியாளர்களுக்கு எலான் மஸ்க் ரகசிய உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மஸ்கின் தலையீடு பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
கிரிமியா பகுதியில் இருந்து அந்த கப்பல்கள் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதல்களால் பொதுமக்கள், சிறார்கள் என கொத்தாக பல கொல்லப்பட்டனர் என உக்ரைன் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |