உக்ரைன் தேடும் அதிபயங்கர போர் குற்றவாளி: வெளிவந்த புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள்!
உக்ரைனிய படைகளால் அதிக முக்கியத்துவத்துடன் தேடப்படும் ரஷ்ய போர் குற்றவாளிகளில் ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் மீது உக்ரைன் தொடர்ந்து பல்வேறு போர் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில், உக்ரைன் போரில் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்ட காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்ய பிராந்தியமான கல்மிகியாவைச் சேர்ந்த 39 வயதான விளாடிமிர் புடின் லுஹான்ஸ்க் ஆயுதக் குழுவான Bryanka-SSSR உடன் இணைந்த போராளியின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த லுஹான்ஸ்க் ஆயுதக் குழுவான Bryanka-SSSR வன்முறை மற்றும் மிருகத்தனத்திற்குப் பெயர்போன பிரிவாகும், மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளில் ரஷ்ய வீரர்கள் குழு பெருமையுடன் நாஜி வணக்கம் செய்வது தெரியவந்துள்ளது.
அத்துடன் வெளியாகியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உக்ரைன் படைகளால் அதிக முக்கியத்துவத்துடன் தேடப்படும் போர் குற்றவாளி, தனித்துவமான கருப்பு தொப்பி, சீருடை மற்றும் சின்னம் ஆகியவற்றை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: கனடாவில் மசாஜ் சென்டர் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த நிலை! கைதான மசாஜ் தெரபிஸ்ட்
MailOnline வெளியிடாத, கேள்விக்குரிய திகிலூட்டும் காட்சிகள் ரஷ்ய உருவமறைப்பு உடைகள் அணிந்த வீரர்கள் குழு, உக்ரைனிய வீரர் ஒருவரின் பிறப்புறுப்பை அகற்றுவதற்கு கத்தியை பயன்படுத்துவதும், ரஷ்ய வீரர்கள் அவர்களை கேலி செய்வதையும் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.