உக்ரைனின் அழிவுகாலத்தை தீர்மானித்த ரஷ்யா., தயார் நிலையில் RS-28 Sarmat சாத்தான் ஏவுகணை
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் இராணுவ திறன் மேலும் வலுப்பெறுகிறது.
ரஷ்யா அதன் புதிய RS-28 Sarmat (Satan II) ஏவுகணை தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இண்டர்கான்டினென்டல் பாலிஸ்டிக் ஏவுகணை (ICBM) 18,000 கிலோமீட்டருக்கு மேல் தூரத்தை அடையக்கூடியது.
இதன் ஒற்றை ஏவுகணை 10 கனமான அணு ஆயுதங்களையோ அல்லது 15 இலகுவான ஆயுதங்களையோ ஏற்றிச் சென்று தாக்கக்கூடிய திறனை கொண்டது.
RS-28 Sarmat ஏவுகணையின் சிறப்பம்சங்கள்
- தொலைவு: 18,000 கிலோமீட்டர்
- நீளம்: 35 மீட்டர் - எடை: 208 டன்
- அமைப்பு: Avangard ஹைப்பர்சோனிக் குளைட் வாகனங்களை இணைக்கும் திறன்
- ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை தவிர்த்து இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இந்த ஏவுகணை, அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் முக்கிய இலக்குகளை நிமிடங்களுக்குள் தாக்கும் திறனை பெற்றது.
உருவாக்கத்தில் சிக்கல்கள்
RS-28 Sarmat திட்டம் பல சோதனைகளில் தோல்விகளை சந்தித்ததாலும் தாமதம் ஏற்பட்டதாலும், இது இன்னும் முழுமையாக போர்க்கால களத்துக்கு தயார் நிலையில் இல்லை என முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
2023 செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனையிலும் ஒரு பாரிய தோல்வி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, ரஷ்யாவின் Strategic Missile Forces துறையின் கட்டுப்பாட்டில் Yars மற்றும் Avangard System-கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன, மேலும் RS-28 Sarmat இயங்குவதற்கு மிக அருகிலிருக்கிறது.
உக்ரைனில் நிலவும் உயர்ந்த பதற்ற சூழலில், இந்த ரஷ்ய ஏவுகணை வரலாற்றிலேயே பாரிய அணுசக்தி பாதுகாப்பு தகுதி எனக் கருதப்படுகிறது. இதனால் உலகளாவிய ரீதியில் அச்சம் நிலவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |