உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறது: வெற்றி நாள் அணிவகுப்பில் விளாடிமிர் புடின்
மாஸ்கோவில் நடந்த வெற்றி நாள் அணிவகுப்பில் உக்ரைனைத் தோற்கடிப்பதாக சபதம் செய்த சில மணி நேரங்களில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு கொண்டுவர
ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த விளாடிமிர் புடின், இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவரவே தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக மோசமான போராகும் இது. ஐரோப்பாவிற்கான புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தனது விருப்பமான பேச்சுவார்த்தைப் பங்குதாரராக ஜேர்மனியின் முன்னாள் சேன்ஸலர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் இருப்பார் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1999-ஆம் ஆண்டின் கடைசி நாள் முதல் ரஷ்யாவை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ ஆண்டு வரும் புடின், உக்ரைன் போர் குறித்து மாஸ்கோவில் எழுந்துள்ள கவலை அலை ஒன்றை எதிர்கொண்டுள்ளார்.
இந்தப் போரானது லட்சக்கணக்கான மக்களைக் கொன்று, உக்ரைனின் பெரும் பகுதிகளை சிதைத்து, ரஷ்யாவின் பொருளாதாரத்தையும் சேதப்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, பனிப்போரின் உச்சக்கட்டத்திற்குப் பிறகு, ஐரோப்பாவுடனான ரஷ்யாவின் உறவுகள் முன்னெப்போதையும் விட மோசமாகியுள்ளன. மேலும், விளாடிமிர் புடின் எதிர்பார்த்தது போன்று, ரஷ்ய இராணுவத்தால் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியம் முழுவதையும் கைப்பற்ற முடியவில்லை.
உக்ரைனுக்கு உதவுவதால்
இந்த ஆண்டு ரஷ்யாவின் முன்னேற்றங்கள் மந்தமடைந்துள்ளன, இருப்பினும் ரஷ்யா உக்ரேனியப் பிரதேசத்தில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் சற்றுக் குறைவான பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதாலையே இந்தப் போர் நீடித்துள்ளதையும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடனான மோதலைத் தீவிரப்படுத்தத் தொடங்கி, அது இன்றுவரை தொடர்கிறது.

இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரவே தாம் விரும்புவதாகவும், இருப்பினும் இது மிகத் தீவிரமான விவகாரம் எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், புடினின் நெருங்கிய நண்பராக ஷ்ரோடர் கொண்டிருந்த பின்னணியும், ரஷ்ய வணிகங்கள் மற்றும் திட்டங்களுடனான அவரது நீண்டகாலத் தொடர்புகளும் காரணமாக, ஷ்ரோடரை உக்ரைன் விவகாரத்தில் ஈடுபடுத்துவது குறித்து உக்ரைனிலும் ஐரோப்பாவிலும் உள்ள பலர் ஐயம் கொண்டுள்ளனர்.
2022-ஆம் ஆண்டில், போர் மூண்ட பிறகு, ஷ்ரோடருடனான புடினின் சந்திப்பும், புடினுக்கு ஆதரவாகப் பேசியதற்கும், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அவரை வெறுப்பூட்டுபவர் என குறிப்பிட்டிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |