ரஷ்ய ராணுவ டாங்கிகளை தகர்த்தெறிந்த உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்!
ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலுக்கு மத்தியில், எதிரி நாட்டின் ராணுவ டாங்கிகளை "ஸ்டுக்னா-பி" என்ற டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் உக்ரைன் ராணுவத்தினர் தாக்கி அழித்தது தொடர்பான வீடியோ ஆதாரம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உக்ரைனில் போரை நிறுத்துவது குறித்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் கண்டிப்பாக எட்டப்படும் என இருநாடுகளை சேர்ந்த உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே போரின் 19வது நாளான இன்றும் உக்ரைனின் பெருபாலான நகரங்களின் மீது தொடர் குண்டுமழை தாக்குதலை ரஷ்யா நடத்திவருகிறது.
Stugna-P anti-tank missile system shows itself in action. pic.twitter.com/TuVhN1fm06
— NEXTA (@nexta_tv) March 14, 2022
இந்த நிலையில் ரஷ்ய படைகளின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்தவகையில், உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களின் ராணுவ டாங்கிகளை "ஸ்டுக்னா-பி" என்ற டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் உக்ரைன் ராணுவத்தினர் அதிரடியாக தாக்கி அழித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை உக்ரைன் ராணுவம் வெளியீட்டு இருந்த நிலையில் தற்போது இது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய நபர்களுக்கு நெருக்கடி: உலகநாடுகளின் நிலைப்பாடு என்ன?