புடினுக்கு அவமானம்... உக்ரைன் போரில் ரஷ்யா இதுவரை இழந்த வீரர்களின் எண்ணிக்கை
உக்ரைன் மீதான படையெடுப்பு என்ற பேரழிவில் குறைந்தது 75,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இது ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கிடைத்துள்ள கடும் பின்னடைவு என்பது மட்டுமின்றி, ரஷ்யாவால் போரில் ஈடுபடுத்தப்பட்ட துருப்புக்களின் எண்ணிக்கையில் பாதி பேர் இப்போது பலியாகியுள்ளனர் என்றே அஞ்சப்படுகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 150,000 துருப்புக்களை களமிறக்கியுள்ளதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் முன்னர் மதிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகள் தரப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் கொல்லப்பட்டுள்ள வீரர்களின் எண்ணிக்கையை கணித்துள்ளதாக எச்சரித்துள்ளனர்.
உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky தெரிவிக்கையில், போரில் ஏற்கனவே 40,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாகவும், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ரஷ்யா தரப்பில் இதுவரை உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை என்பது மட்டுமின்றி, சில நூறு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
கடந்த வாரம், சிஐஏ இயக்குனர் 60,000 ரஷ்ய வீரர்கள் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்று மதிப்பிட்டார், சிலர் இன்னும் துல்லியமாக 80,000 பேர் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையான எண்ணிக்கை வெளிவருவது சந்தேகமே என ஆய்வாளர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.