உக்ரைனில் இதுவரை பலியான ரஷ்ய வீரர்களின் மொத்த எண்ணிக்கை... முக்கிய தளபதியை நீக்கிய புடின்
உக்ரைனில் இதுவரை 50,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், விளாடிமிர் புடின் முக்கிய தளபதியை நீக்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான சிறப்பு படைகள் உட்பட இராணுவத்தின் பல பிரிவுகளில் கடுமையான இழப்பை எதிர்கொண்டுள்ளதை அடுத்து தளபதி Andrey Serdyukov-வை முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார் புடின்.
இதுவரை 50,000 வீரர்களை உக்ரைன் போரில் ரஷ்யா இழந்துள்ளது. இந்த நிலையிலேயே Mikhail Teplinsky என்பவரை உக்ரைன் போர்க்களத்தில் புதிய தளபதியாக புடின் நியமித்துள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் அப்பாவி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்த Serdyukov மீது பிரித்தானியா பல்வேறு தடைகளை விதித்திருந்தது.
Serdyukov-வை நீக்கியுள்ளது உண்மை என்றால், உக்ரைனில் ரஷ்யாவின் தோல்விக்கு அவர் தான் முழு பொறுப்பு எனவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி, கடந்த மூன்று மாதங்களில் ரஷ்ய தரப்பில் மூத்த இராணுவ அதிகாரிகளை நீக்குவதும் புதிதாக ஒருவரை நியமிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
ஆனால் Serdyukov தளபதி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பில் ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ரஷ்யாவின் சிறந்த இராணுவ தலைவர்களில் ஒருவராக கொண்டாடப்படும் Serdyukov, உயரிய விருதுகளும் பெற்றுள்ளார். 2014ல் கிரிமியா தாக்குதல் திட்டத்தை முன்னின்று நடத்தியவர் தளபதி Serdyukov என்றே கூறப்படுகிறது.