சிதறிய ரஷ்ய போர் விமானம், நொடியில் வெளியேறிய விமானி: புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரம்!
ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானம் Yeysk நகரில் விபத்துக்குள்ளானது.
விமானி இறுதி நேரத்தில் விமானத்தில் இருந்து வெளியேறி உயிர் பிழைப்பு.
ரஷ்யாவின் Su-34 ரக போர் விமானம் தெற்கு பகுதியில் உள்ள Yeysk நகரின் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
Su-34 ரக ரஷ்ய போர் விமானம் திங்கட்கிழமை மாலை அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பற்றி ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள Yeysk நகரில் விபத்துக்குள்ளானது என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Surveillance camera caught the moment of a Russian Su-34 crash in Yeysk. pic.twitter.com/vQ8hDxmlsx
— ТРУХА⚡️English (@TpyxaNews) October 17, 2022
அத்துடன் விபத்து ஏற்பட்ட விமானத்தின் விமானி விபத்திற்கு முன்னதாகவே இறுதி நொடியில் வெளியேறிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
விபத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி அளித்த தகவலின் அடிப்படையில், விமானம் புறப்படும் போது இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியது, அதன் விளைவாகவே இந்த மோதல் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் மீது போர் விமானம் மோதியதில் பல மாடி கட்டிடத்தின் ஐந்து தளங்களில் தீ பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ்: நெருக்கடிக்கு மத்தியில் பதவியை காப்பாற்ற போராட்டம்
இதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த அவசர சேவைகள் அழைக்கப்பட்டன, மற்றும் அருகிலுள்ள பள்ளி ஒன்றில் இருந்து மாணவர்கள் அனைவரும் விரைவாக வெளியேற்றப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.