சாத்தான் 2 அணு ஏவுகணையை வீசி பிரித்தானியாவை காணாமல் போகச்செய்துவிடுவோம்: ரஷ்யா மிரட்டல்
ஒரு சாத்தான் 2 அணு ஏவுகணை போதும், பிரித்தானியா காணாமல் போய்விடும் என ரஷ்ய தரப்பிலிருந்து பிரித்தானியாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரித்தானியாவை அணுகுண்டு வீசி அழித்துவிடுமாறு ரஷ்ய அரசு தொலைக்காட்சி புடினை வலியுறுத்தியுள்ளது.
புடினுக்கு வக்காலத்து வாங்குபவர் என அழைக்கப்படும் Vladimir Solovyov என்ற ரஷ்ய தொலைக்காட்சி பிரபலம், ரஷ்யா புதிதாக கண்டுபிடித்துள்ள சாத்தான் 2 ஏவுகணை என அழைக்கப்படும் Sarmat ஏவுகணை குறித்துப் பேசும்போது, ஒரு சாத்தான் 2 ஏவுகணை போதும், பிரித்தானியா காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.
இந்த சாத்தான் 2 ஏவுகணை என அழைக்கப்படும் Sarmat ஏவுகணை, உலகின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய அணு ஏவுகணையாகும்.
15 அணுகுண்டுகளை சுமந்து சென்று வீசக்கூடிய இந்த ஏவுகணையை, தற்போது உலகில் இருக்கும் எந்த ஆயுதமும் தடுத்து நிறுத்த முடியாது என ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.