உயிர்வாழ விரும்பினால்...உங்கள் எல்லைகளுக்கு ஓடுங்கள்: ரஷ்ய வீரர்களுக்கு ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!
உயிர்வாழ விரும்பினால் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை.
ரஷ்ய வீரர்கள் அவர்களது எல்லைகளுக்கு விரட்டி அடிக்கப்படுவார்கள்.
உயிர்வாழ விரும்பினால் உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என ரஷ்ய துருப்புகளை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தெற்கு பகுதி நகரான கெர்சனில் தீவிரமடைந்து வருகிறது.
உக்ரைனிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், தற்போது கெரசன் நகரில் உள்ள ரஷ்ய படைகளின் முதல்நிலை பாதுகாப்பை உக்ரைனிய ராணுவம் உடைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Zelensky tonight: “Anyone want to know what our plans are? You won’t hear specifics from any truly responsible person. Because this is war.”
— Christopher Miller (@ChristopherJM) August 29, 2022
“But the occupiers should know: we will oust them to the border.”
“If they want to survive, it is time for the Russian military to flee.” pic.twitter.com/PMMfqWOW1r
இதுத் தொடர்பாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், நாங்கள் சில திசைகளில் தாக்குதலைத் தொடங்கினோம், மேலும் இந்த நடவடிக்கையைப் பற்றி எங்களால் அதிக விவரங்களை கொடுக்க முடியாது, ஆனால் தாக்குதல் தொடங்கிவிட்டது. என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புகளை உடனடியாக வெளியேறுமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
மேலும் நாட்டு மக்களுக்கு தனது வழக்கமான வீடியோ உரையில் பேசிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய துருப்புகள் உயிர்வாழ விரும்பினால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுங்கள், என்னென்றால் உக்ரைன் தற்போதைய மோதலில் நிச்சியமாக வெற்றி பெறும் என உறுதியளித்துள்ளார்.
ukrinform
மேலும் உக்ரைனின் எல்லை கோடுகளில் எத்தகைய மாற்றமும் இல்லை, அத்துடன் ஆக்கிரமிப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் அவர்களை அவர்களது எல்லைகளுக்கு விரட்டியடிப்போம் என்று எச்சரித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 1000க்கும் அதிகமானோரை பலி கொண்ட வெள்ளம்: பாகிஸ்தானுக்கு பிரித்தானிய மகாராணி ஆறுதல்
ரஷ்ய வீரர்கள் தாயகம் செல்ல பயந்து சரணடைந்தால், அவர்கள் ஜெனிவா உடன்படிக்கையின் படி நடத்தப்படுவார்கள் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.