உக்ரைன் போரில் புதிய ஆயுதம்., கொன்று குவிக்கப்படும் ரஷ்ய வீரர்கள்
ரஷ்ய வீரர்களை கொல்ல, உக்ரைன் தற்போது தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறது.
உக்ரைன்-ரஷ்யா போர் தற்போது மனிதர்களால் அல்ல, இயந்திரங்களால் நடத்தப்படுகிறது.
உக்ரைன் தனது படைவீரர்களின் உயிரிழப்பை குறைக்க, ட்ரோன்கள், ரோபோ வாகனங்கள் மற்றும் தொலைநிலை ஆயுதங்களை அதிகமாக பயன்படுத்துகிறது.
போர்க்களத்தில் நேரடியாக வீரர்கள் செல்லாமல், கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து கமாண்டர்கள் திரைகளின் மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ரோபோ வாகனங்கள் ரஷ்ய படைகளின் முகாம்களை குறிவைத்து தாக்குகின்றன. மேலிருந்து கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஏப்ரல் மாதத்தில், “முதல் முறையாக ரஷ்ய முகாமை ரோபோ மற்றும் ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்தி கைப்பற்றியுள்ளோம்” என்று அறிவித்தார்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் 22,000-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மனிதர்களின்றி இயக்கப்படுகின்றன.
ரஷ்ய வீரர்கள் இந்த ரோபோ வாகனங்களை “Silent Death” (அமைதியான மரணம்) என்று அழைக்கின்றனர். காரணம், அவை மிக அமைதியாக நகர்ந்து செல்கின்றன. 10 மீட்டர் தூரத்தில் வந்தபின் மட்டுமே ரஷ்ய வீரர்களுக்கு அதன் சத்தம் கேட்கும்.
உக்ரைன் அதிகாரிகள், மாதத்திற்கு 35,000 ரஷ்ய வீரர்களை அழிப்பதே தங்கள் இலக்கு என தெரிவித்துள்ளனர். பிரித்தானிய உளவு அமைப்பு GCHQ, ரஷ்யாவின் மொத்த உயிரிழப்பு 5 லட்சம் என மதிப்பிட்டுள்ளது.
இப்போது ரோபோக்கள் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற, பொருட்களை களத்திற்கு கொண்டு செல்ல, தாக்குதல்களை நடத்த என பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |