ட்ரம்ப் ஜெலன்ஸ்கி காரசார விவாதத்தின்போது பெண்ணொருவர் செய்த செயல்: வைரல் புகைப்படம்
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருக்கும்போது பெண்ணொருவர் செய்த செயலைக் காட்டும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
யார் அந்தப் பெண்?
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு வந்த நிலையில், ட்ரம்பும் அமெரிக்க துணை ஜனாதிபதியான JD வேன்ஸும் அவரை தொடர்ந்து அவமதித்தார்கள்.
என்றாலும் சற்றும் பொறுமை இழக்காத ஜெலன்ஸ்கி தனது தரப்பு விளக்கத்தை நிதானமாக முன்வைத்தும் ட்ரம்பும் JD வேன்ஸும் அவரை குறை சொல்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
The Ukrainian ambassador had her head in her hands by this point. pic.twitter.com/AhnsgWbqOb
— Kaitlan Collins (@kaitlancollins) February 28, 2025
இந்நிலையில், அந்த காரசார விவாதத்தின்போது, பெண்ணொருவர் தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்தப் பெண், உக்ரைன் தூதரான ஒக்சானா மார்க்கரோவா (Oksana Markarova) ஆவார்.
ட்ரம்ப் ஜெலன்ஸ்கி சந்திப்பில் நிலவிய விரக்தியும் பதற்றமுமே ஒக்சானாவின் செயலில் எதிரொலித்தன எனலாம்.
கடைசியில், அமைதிப் பேச்சுவார்த்தைகள், எந்த பலனையுமே கொடுக்காமல் முடிந்துள்ளதுதான் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது!