இவர் எந்த நாட்டு அழகி என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்... சுவாரஸ்ய தகவல்கள் செய்திக்குள்
ஆசிய நாடொன்றில் சமீபத்தில் நடத்தப்பட்ட அழகிப்போட்டியில், ஒரு அழகான பெண் அந்நாட்டு அழகியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் எந்த நாட்டு அழகி என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்து, அதில் அழகிப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பெண் எந்த நாட்டவர் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ஒரு போட்டியே நடத்தலாம்.
Pic: Miss Japan Association
ஆம், இந்த அழகிப் போட்டி நடத்தப்பட்டது ஜப்பானில். மிஸ் ஜப்பானாக தேர்வு செய்யப்பட்டவரோ, ஆசியப் பெண்ணே அல்ல. அவர் உக்ரைன் நாட்டுப் பெண். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்ற பெண்கள், புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு நின்றாலும், அவர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும். என்னடா, மிஸ் ஜப்பான் அழகி என்று சொல்லிவிட்டு ஒரு ஐரோப்பியப் பெண்ணை தேர்வு செய்துவிட்டார்களே என ஆளாளுக்கு வயிறு எரிந்திருக்கமாட்டார்களா என்ன?
Pic: Instagram/@karolina0824
யார் அந்தப் பெண்?
மிஸ் ஜப்பான் அழகியாக தேர்வு செய்யப்பட்ட அந்த இளம்பெண்னின் பெயர் கரோலினா ஷினோ (Carolina Shiino, 26). கரோலினாவின் தாய் உக்ரைன் நாட்டவர். ஆனால், அவர் ஜப்பான் நாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். கரோலினாவுக்கு 5 வயது ஆனதும் அவரது குடும்பம் ஜப்பானுக்குக் குடிபெயர்ந்துள்ளது.
Pic: The telegraph
அவர் மிஸ் ஜப்பான் அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜப்பான் பரம்பரையில் வராத ஒரு பெண் எப்படி மிஸ் ஜப்பான் அழகியாக தேர்வு செய்யப்படலாம் என ஜப்பான் நாட்டு மக்கள் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Pic: The telegraph
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |