உக்ரைன் இளைஞர்களை ஏமாற்றி... விரக்தியடைந்த புடினின் மோசமான தந்திரம் அம்பலம்
உக்ரேனிய சிறார்களை படையில் சேர்த்து, அவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக மாற்ற மூளைச்சலவை செய்ததாக புடின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரிகளின் சூழ்ச்சி
உக்ரேனிய இளைஞர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் இருக்கும் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் உயிருக்கு ஈடாக பணம் அளிக்கும் மோசமான தந்திரத்தை புடின் மேற்கொள்வதாக உக்ரேனிய பாதுகாப்பு சேவை அம்பலப்படுத்தியுள்ளது.
மார்ச் மாதம் 15 மற்றும் 17 வயதுடைய சிறார்கள் இருவர் ரஷ்ய அதிகாரிகளின் சூழ்ச்சியால், உக்ரைன் நகரம் ஒன்றில் குண்டு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Ivano-Frankivsk நகரில் அவர்கள் வெடிகுண்டுடன் நடந்து சென்றபோது எதிர்பாராதவகையில் குண்டு வெடிக்க, சம்பவயிடத்திலேயே 17 வயது சிறுவன் உடல் சிதறி பலியாகியுள்ளான்.
ஆனால் அந்த 15 வயது சிறுவன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர்கள் கொண்டுசென்ற வெடிகுண்டானது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்பதுடன், தொலைவில் இருந்து இயக்கப்படும் கருவியால் இணைக்கப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
மூளைச்சலவை செய்வது எளிது
இருவரும் ரஷ்ய தரப்பு பணம் அளித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. இதேபோன்று இளம் தாயார் ஒருவர், உக்ரைன் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமும் கடந்த பிப்ரவரியில் நடந்தேறியது.
அப்பாவியான பெண் ஒருவர் விட்டுச்சென்ற பை திடீரென்று வெடித்ததில் மூன்று உக்ரைன் வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இளைஞர்களை மூளைச்சலவை செய்வது எளிது என்பதால், ரஷ்யா வேண்டுமென்றே அவர்களை கவர்ந்திழுக்கிறது என்று பாதுகாப்பு சேவை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறை அத்தகையவர்களை ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருளாகக் கருதுகின்றன, அவர்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.
ரஷ்யா தனது கடுமையான போரில் எவ்வாறு விரக்தி அடைந்துள்ளது என்பதைக் காட்டும் பல உதாரணங்களில் இந்தத் தாக்குதல்கள் சமீபத்தியவை என்றே உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |