ரஷ்யாவின் ஏவுகணை தாக்கு தளம் அழிப்பு: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன் ஆயுதப்படை
உக்ரைனை ரஷ்யா ஐந்தாவது நாளாக இன்றும் தாக்கி வரும் நிலையில், அதற்கு பதிலடி குடுக்கும் விதமாக ரஷ்யாவின் ஏவுகணை தாக்கு தளத்தை உக்ரைன் தனது ட்ரோன் மூலம் தாக்கி அழித்துள்ளது.
ரஷ்யா தனது ராணுவ படைகள் மூலம் அனைத்து பக்கங்களிலும் இருந்து தாக்கி உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ் கைப்பற்றியுள்ளது, மேலும் உக்ரைனின் தலைநகர் கிளிவ்வை கைப்பற்றும் முனைப்பில் சுற்றிவளைத்துள்ளது.
Ukraine drone appears to destroy Russian missile system
— Fox News (@FoxNews) February 28, 2022
https://t.co/CJbURwbxod
இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி குடுக்கும் விதமாக உக்ரைன் தங்களின் ட்ரோன்களை கொண்டு ரஷ்யாவின் ஏவுகணை தாக்கு தளத்தை முழுமையாக அழித்துள்ளது.
மேலும் இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தை உக்ரைன் ஆயுதப்படை பாதுகாப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியீட்டு, இதுவரை உக்ரைன் அழித்துள்ள ரஷ்யா ராணுவ துருப்புகளின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ஆயுதப்படை வெளியிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் இதுவரை உக்ரைன் தாக்குதலால் சுமார் 4600 ரஷ்ய வீரர்கள் வரை கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ukraine is inflicting disastrous losses on the enemy.
— MFA of Ukraine ?? (@MFA_Ukraine) February 27, 2022
The overall Russian losses in these 3,5 days ⤵️ pic.twitter.com/LR5Jb3dZMK
மேலும் 1 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, 46 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள், 146 டாங்கிகள், 706 ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் 200 போர் பிணைக்கைதிகள் என ரஷ்யா இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.