ஜெலென்ஸ்கிக்கு அடுத்த நெருக்கடி... அமெரிக்காவால் ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரர்கள் சிக்கலில்
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான உக்ரேனிய வீரர்கள் அங்கு ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓங்கிய ரஷ்யாவின் கை
ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் கைவிட்டுள்ள நிலையில், பிரித்தானியா தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் ஆயுத உதவிகள் குறித்து இதுவரை உறுதி ஏதும் அளிக்காத கட்டத்தில், உக்ரைன் ஜனாதிபதிக்கு இது ஒரு பேரிடியாகவே பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தைக் கைப்பற்றினால், போர் நிறுத்தம் குறித்து அழுத்தமளிக்கலாம் என நம்பியிருந்த ஜெலென்ஸ்கி கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களில் ரஷ்யாவின் கை ஓங்கியுள்ளதாகவே தகவல் வெளிவருகின்றன. அதே வேளை, உக்ரைனும் ட்ரம்ப் நிர்வாகத்தால் கைவிடப்பட்டு, ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட அமெரிக்காவால் அழுத்தமளிக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த ஒரு கூட்டு எதிர் தாக்குதலின் ஒரு பகுதியாக ரஷ்யப் படைகள் குர்ஸ்க் பிரதேசத்தை மீட்டெடுத்த பிறகு உக்ரேனியப் படைகள் துண்டாகும் என்றே கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியான நிலைக்கு காரணம் ட்ரம்ப் நிர்வாகம் உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர்ந்துகொள்வதை நிறுத்தியதே என கூறப்படுகிறது.
சுற்றி வளைக்கப்பட்டு
மட்டுமின்றி உக்ரைன் படைகள் சொந்த நாட்டுக்குள் அரசியல் ரீதியாக மோசமான மற்றும் உளவியல் ரீதியாக கடினமான பின்வாங்கலுக்குத் தள்ளப்படலாம் அல்லது கைப்பற்றப்படும் அல்லது கொல்லப்படும் அபாயம் இருக்கலாம் என்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுடன் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் கீழ் உக்ரைன் இருக்கும் நேரத்தில் இந்த தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. போரை தொடங்கிய ரஷ்யாவை கண்டுகொள்ளாமல் உக்ரைன் மீது ட்ரம்ப் நிர்வாகம் அழுத்தமளித்து வருவதால், அந்த வாய்ப்பை தங்களுக்கு சாதமாக ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
ரஷ்யாவிற்குள் இருந்த உக்ரேனியப் படையின் முக்கால்வாசிப் பேர்கள் தற்போது கிட்டத்தட்ட முழுமையாகச் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது.
முன்னதாக தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்கா, உக்ரைனுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |