புடின் அறிவிப்பை உடைத்தெறிந்து உக்ரைன் படை: கெர்சன் நகரின் இரண்டு குடியிருப்புகள் மீட்பு
கெர்சன் நகரின் இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய படை விடுவித்து இருப்பதாக தகவல்.
உக்ரைனிய படைகளின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி.
ரஷ்ய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரின் இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய படை விடுவித்து இருப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் உச்சமாக, கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அத்துடன் ரஷ்ய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என இணைப்பு விழாவில் எச்சரிக்கை செய்தி ஒன்றிணையும் தெரிவித்து இருந்தார்.
REUTERS
இந்த நிலையில் ரஷ்ய படைகளால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரஷ்யாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனின் Arkhanhelske மற்றும் Myrolyubivka ஆகிய இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய ஆயுதப் படை விடுவித்து இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளுக்கு எதிராக முன்னணியில் தாக்குதல் நடத்தி தங்களை வேறுபடுத்திக் காட்டிய உக்ரைனிய படைகளின் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரண்டு சிறிய குடியேற்றங்களின் விடுவிப்பு குறித்து அறிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவின் சமூக கிளப்பில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி! பொலிஸார் விசாரணை
REUTERS
இதற்கு முன்னதாக பேசிய உரையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைன் படைகளின் வெற்றி டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள லைமனுக்கு மட்டும் அல்ல என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.