கருங்கடலில் ரஷ்ய கப்பலை தாக்கிய உக்ரைன்!
கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற்படை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ஒடேசா பகுதியைப் பாதுகாக்கும் போது கடற்படைப் படைகள் ரஷ்யக் கப்பலைத் தாக்கியுள்ளன.
இந்த தாக்குதலில் ரஷ்ய தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை என தெரிவித்துள்ளது.
ரஷ்ய ரோந்து கப்பலான Vasily Bykov-ஐ உக்ரைன் கடற்படை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் கருங்கடலில் கப்பல் ஒன்று தாக்கப்பட்ட தீப்பற்றி எரிந்து கரும்புகை வான் அளவிற்கு சூழ்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதேசமயம், ஒடேசா தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமாகும், மேலும் இது ரஷ்யாவின் முக்கிய இலக்காக இருக்கிறது.
ரஷ்யப் படைகள் ஒடேசா நகரத்தை கைப்பற்றிவிட்டால், அது உக்ரேனை அதன் பெரும்பாலான கடல்வழி இறக்குமதி மற்றும் ஏற்றுமதியிலிருந்து துண்டித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.