உக்ரேனிய குழந்தைகள் உடம்பில் பெற்றோர் எழுதும் தகவல்கள்! காரணம் இதுதான்... நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்
ரஷ்ய தாக்குதலில் தாங்கள் இறந்து போனால் குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏதுவாக இருக்க அவர்கள் முதுகில் குடும்ப தகவல்களை உக்ரேனிய பெற்றோர் எழுதியிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி நெஞ்சை உருக்கியுள்ளது.
இந்த தகவலை உக்ரேனிய பெண் பத்திரிக்கையாளரான அனஸ்டாசியா லேபடினா தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் Vira என்ற சிறுமியின் முதுகில் அவரின் பிறந்த தேதி எழுதப்பட்டுள்ளது, இதோடு சில எண்களும் எழுதப்பட்டுள்ளது.
Viraவின் தாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கையில், எங்களுக்கு போர் சண்டையில் எதாவது நேர்ந்தால், என் மகளை யாராவது காப்பாற்ற இப்படி எழுதியுள்ளோம் என்றார்.
Ukrainian mothers are writing their family contacts on the bodies of their children in case they get killed and the child survives. And Europe is still discussing gas. pic.twitter.com/sK26wnBOWj
— Anastasiia Lapatina (@lapatina_) April 4, 2022
அதே போல Vira பற்றிய தகவல்கள் அடங்கிய அட்டை அவர் உடையில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல உக்ரேனிய தந்தை ஒருவர் தனது மகள் டி-ஷர்ட்டின் எண்களுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார்:
எனது 5 வயது மகள் இந்த டி-ஷர்ட்டை அணிந்திருக்க, ஐரோப்பா ரஷ்ய எண்ணெய், எரிவாயு மற்றும் பணத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தது என வேதனையுடம் பதிவிட்டுள்ளார்.
நாங்களும் இது போல எங்கள் குழந்தைகளின் உடலிலும், உடையிலும் தகவல்களை எழுதியுள்ளோம் என மேலும் சில பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.