காபூலுக்கு வந்த உக்ரோனிய விமானம் ஆயுதமேந்திய மரம் நபர்களால் கடத்தல்..! என்ன நடந்தது?
உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது என்று உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் Yevgeny Yenin கூறினார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருக்கும் குடிமக்களை திரும்ப அழைத்து வரும் பணியில் வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டு படைகள் நாட்டில் இருக்கக்கூடாது என தலிபான்கள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், காபூலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உக்ரேனிய விமானம் மர்ம நபர்காளல் கடத்தப்பட்டது என்று உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் Yevgeny Yenin கூறினார்.
செவ்வாய்க்கிழமை, விமானம் அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு பறந்தது.
அந்த விமானத்தில் உக்ரேனியர்கள் யாரும் பயணிக்கவில்லை என Yevgeny Yenin கூறினார்.
மக்கள் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முடியவில்லை என்பதால் எங்களால் மக்களை வெளியேற்ற முடியவில்லை என அவர் கூறினார்.
உக்ரைன் விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் ஆயுதம் ஏந்தி இருந்ததாக Yevgeny Yenin கூறியுள்ளார்.
இருப்பினும், Yevgeny Yenin விமானத்திற்கு என்ன நடந்தது அல்லது உக்ரைன் அதை திரும்பப் பெற முயற்சி மேற்கொண்டதா என்பது குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை.
இதனிடையே, விமானம் கடத்தப்பட்டதாக பரவிய செய்தியை உகரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.