ரஷ்யாவிடம் பிணைக்கைதியாக வர தயார்: உக்ரைன் போலீஸ் அதிகாரி அறிவிப்பு
மரியுபோல் நகரில் இருந்து பத்திரமாக குழந்தைகளை வெளியேற்ற, ரஷ்ய ராணுவத்திடம் பிணைக்கைதியாக வர உக்ரைன் பொலிஸ் ஜெனரல் வியாசஸ்லாவ் அப்ரோஸ்கின் (Vyacheslav Abroskin) முன்வந்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் கிட்டத்தட்ட 30 நாள்களை தொட்டிருக்கும் இந்த வேளையில், உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய ராணுவத்தினர் முழுமூச்சுடன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தீவிர தாக்குதலுக்கு முன்னதாக, மரியுபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் ஆயுதப்படைகளும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையுமாறு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தது, ஆனால் அதற்கு உக்ரைன் முழுமையாக மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில் அந்த நகரின் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
#Ukrainian police general Vyacheslav Abroskin offered himself as a hostage to #Russian troops in exchange for the evacuation of children from #Mariupol. pic.twitter.com/wfy4GMpI6L
— NEXTA (@nexta_tv) March 25, 2022
ரஷ்யாவின் இந்த தாக்குதலால் மரியுபோல் நகரில் சுமார் 2,00,000 மக்கள் உணவு, மின்சாரம், தண்ணிர் போன்ற அடிப்படை வசதிகள் என அனைத்தும் தடைபட்டு பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், மரியுபோல் நகரில் இருந்து குழந்தைகளை மட்டுமாவது வெளியேற்ற ரஷ்யா ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தது அதற்கு மாற்றாக உக்ரைனின் போலீஸ் ஜெனரல் வியாசஸ்லாவ் அப்ரோஸ்கின் பிணைக்கைதியாக வருவதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் புடின் புலி உயிரிழப்பு: சோகத்தில் பூங்கா நிர்வாகம்!