அடிதடியில் இறங்கிய உக்ரைன் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
துருக்கியின் நடைபெற்ற மாநாடு ஒன்றின்போது, உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடிதடியில் இறங்கிய உக்ரைன் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
துருக்கியின் தலைநகரான Ankaraவில் The Black Sea Economic Cooperation (BSEC) என்னும் அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெறும்போதுதான் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் நடைபெற்றது.
உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினரான Oleksandr Marikovsky உக்ரைன் கொடியுடன் புகைப்படத்துக்காக போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, ரஷ்ய தரப்பைச் சேர்ந்த Valery Stavitsky என்பவர், Oleksandr கையிலிருந்து உக்ரைன் கொடியைப் பிடுங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
Credit: Twitter
உடனே அவரைப் பின்தொடர்ந்த Oleksandr, அவரைத் தாக்க, இருவரும் ஒருவரையொருவர் தாக்கத் துவங்கியுள்ளனர். உடனடியாக பாதுகாவலர்கள் வந்து இருவரையும் தடுத்துள்ளனர்.
உண்மையில் நடந்தது என்ன?
ஆனால், ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான Olga Timofeeva என்பவரை ஊடகவியலாளர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கும்போது, Oleksandr அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு உக்ரைன் கொடியை அசைத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
Credit: Twitter
மேலும், Olga, மாநாட்டில் உரையாற்றும்போதும், உக்ரைன் தரப்பினர் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு உக்ரைன் கொடியை ஆட்டிக்கொண்டிருந்தார்களாம்.
தொடர்ந்து ஊடகவியலாளர்கள் பேட்டியின்போதும் Oleksandr அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு உக்ரைன் கொடியை அசைத்துக்கொண்டிருந்திருக்கவே, எரிச்சலான Valery, Oleksandr கையிலிருந்து உக்ரைன் கொடியைப் பிடுங்கிச் சென்றுள்ளார்.
? In Ankara ??, during the events of the Parliamentary Assembly of the Black Sea Economic Community, the representative of Russia ?? tore the flag of Ukraine ?? from the hands of a ?? Member of Parliament.
— Jason Jay Smart (@officejjsmart) May 4, 2023
The ?? MP then punched the Russian in the face. pic.twitter.com/zUM8oK4IyN
அதைத் தொடர்ந்துதான் இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கைகலப்பில் காயமடைந்த Valery மருத்துவப்பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.