எதிரியின் எல்லைக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைன் வீரர்: அடுத்து நடந்த பரபரப்பான சம்பவம்
எதிரியின் எல்லைக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைன் வீரர் ஒருவரை, வீடியோ கேம் பாணியில் அவரது தளபதிகள் மீட்ட ஒரு சுவாரஸ்ய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
எதிரியின் எல்லைக்குள் சிக்கிக்கொண்ட உக்ரைன் வீரர்
உக்ரைன் படையைச் சேர்ந்த டாங்கர் என்னும் அடையாளப் பெயரால் அழைக்கப்படும் Andriy, தனது சக வீரர்களுடன் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிக்குள் சிக்கிக்கொண்டார்.
அவரது சக வீரர்கள் ரஷ்ய தாக்குதலில் உயிரிழக்க, அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட டாங்கரை மீட்க அவரது தளபதிகள் முடிவு செய்துள்ளார்கள்.
ஆனால், எதிரியின் எல்லைக்குள் சென்று அவரை மீட்பது கடினம். ஆகவே, வீடியோ கேம் பாணியில் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
Ukrainian soldier stuck in the grey zone was delivered a electric bicycle by drone to help him evacuate. pic.twitter.com/Z80Xqx72wp
— Clash Report (@clashreport) July 30, 2025
ஆம், பேட்டரியால் இயங்கும் சைக்கிள் ஒன்றை ட்ரோன் மூலம் டாங்கருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்கள் அவரது தளபதிகள்.
அப்படியே ட்ரோன் ஒன்று சைக்கிள் ஒன்றை சுமந்து செல்ல, அதை ரஷ்யப் படைகள் சுட்டு வீழ்த்தின. இரண்டாவதாக ஒரு சைக்கிளை அனுப்ப, அதுவும் வெற்றிகரமாக சென்று சேரவில்லை.
சற்றும் தளராமல், எப்படியாவது தங்கள் வீரரை மீட்க முடிவு செய்த உக்ரைன் வீரர்கள், மூன்றாவதாக ஒரு சைக்கிளை அனுப்ப, அது டாங்கரைச் சென்றடைந்துள்ளது.
டாங்கர், சைக்கிளில் ஏறி 400 மீற்றர் தூரம் பயணித்த நிலையில், எதிரிகள் கண்ணிவெடி ஒன்றை வெடிக்கச் செய்ய, காயமடைந்துள்ளார் அவர்.
காலை இழுத்துக்கொண்டே 200 மீற்றர் தூரம் நடந்துவந்த டாங்கரை கமெரா மூலம் கண்டுபிடித்த உக்ரைன் தளபதிகள், மீண்டும் ஒரு மின்சார சைக்கிளை அனுப்ப, உயிர் தப்பி வந்து தன் வீரர்களுடன் சேர்ந்துகொண்டுள்ளார் டேங்கர்.
திரைப்படம் போல தங்கள் வீரரை உக்ரைன் தளபதிகள் மீட்கும் இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |