ரஷ்யாவிடம் சரணடைந்த உக்ரேனிய ராணுவ வீரர்கள்!
உக்ரைனின் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் 265 உக்ரேனிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, கடந்த சில தினங்களாக போரில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கார்வ் நகரை உக்ரைன் படைகள் மீட்டுள்ளனர். மேலும், சுமி நகரில் எல்லை தாண்டி ஊடுருவ ரஷ்ய படைகள் மேற்கொண்ட முயற்சியை உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன.
எனினும், உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் 265 உக்ரேனிய ராணுவ வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்ததாகவும், இதில் காயமடைந்த பலரும் அடங்குவர் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
சீறிச்சென்ற ரஷ்யா டாங்கிகளை தாக்கி சிதறடித்த உக்ரைன்! வெளியான வீடியோ ஆதாரம்
முன்னதாக, நேற்று அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் காயமடைந்த நிலையில் இருக்கும் உக்ரேனிய வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் Novoazovsk-ல் உள்ள மருத்துவ மையங்களுக்கு அழைத்து செல்ல ஒப்புந்தம் ஏற்பட்டதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து அசோவ்ஸ்டல் எஃகு ஆலையிலிருந்து 10-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்றதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.