ட்ரம்பால் ரஷ்யாவுக்குள் சிக்கிக்கொண்ட 10,000 உக்ரைன் வீரர்கள்: வெளிவரும் புதிய தகவல்
ரஷ்யாவில் புகுந்து சண்டையிட்டுவரும் சுமார் 10,000 உக்ரேனிய வீரர்கள், ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றிவளைக்கப்படும் அபாயம்
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிரடியாக நுழைந்து தாக்குதல் முன்னெடுத்துள்ள உக்ரைன் படைகள், தற்போது டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கையால் அங்கிருந்து தப்ப முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
மட்டுமின்றி, இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளும் கைவிட்டுப் போகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. உக்ரேனியப் படைகள் குர்ஸ்கில் இருந்து பின்வாங்கி எல்லை நோக்கி வெளியேறுவது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யா தென்கிழக்கில் வெற்றி பெற்று உக்ரைன் படைகளின் விநியோகப் பாதைகளைத் தாக்கும்போது அவர்கள் சுற்றிவளைக்கப்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, குர்ஸ்க் பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் துருப்புக்கள் மிகவும் மேம்பட்ட ரஷ்ய ட்ரோன்களின் தாக்குதலையும், வட கொரிய படைகளின் காமிகேஸ் தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.
ரஷ்ய ஆதரவு நகர்வுகளே
உக்ரைன் துருப்புகளின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம் டொனால்டு ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு நகர்வுகளே என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர். உக்ரைன் போரை மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக கூறும் அமெரிக்கா, உக்ரைனுக்கான ஆயுத உதவிகள், உளவுத்துறை தரவுகள் என அனைத்தையும் முடக்கி, ரஷ்யாவின் கை ஓங்கும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
அமெரிக்காவின் உளவு உதவிகள் இல்லை என்றால் உக்ரைனால் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. மட்டுமின்றி, ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களையும் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |