நான் வீட்டுக்கு போகனும்... பதுங்கு குழியில் வசிக்கும் உக்ரேனிய சிறுமியின் உருக வைக்கும் காணொளி
பதுங்கு குழியில் இருக்கும் 4 வயது சிறுமியின் கலங்க வைக்கும் காணொளியை உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் பகிர்ந்த வீடியோவில், பதுங்கு குழியில் இருக்கும் சிறுமி ஒருவர், கையில் புத்தகத்தை புரட்டிய படி பேசுகிறார்.
என் பெயர் Alice. நான் இங்கிருந்து வெளியேற வேண்டும். நான் இப்போது பதுங்குமிடத்தில் இருக்கிறேன். நான் என் வீட்டுக் போக விரும்புகிறேன். நான் எனது பாட்டிக்கு ஹலோ சொல்ல வேண்டும் என சிறுமி கூறுகிறார்.
ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் தாக்குதல் நடத்த திட்டம்! பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை
உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் Mykhailo Podolyak வீடியோவுடன் பதிவிட்டதாவது, வீடியோவில் இருக்கும் சிறுமியின் பெயர் Alice, 4 வயது. அவர் ராணுவ உறவினர்களுடன் மரியுபோலில் உள்ள பதுங்கு குழி ஒன்றில் வசிக்கிறார்.
ரஷ்யாவிடம் சிக்கினால் என்ன நடக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த உலகம் இவர்களை காப்பாற்றுமா?
This is Alice, she is 4. She lives in one of the bunkers in #Mariupol with relatives of the military. It is clear what will happen when ?? gets there. Can the world save them? Yes, if @Pontifex level leaders get together and help to get them out of there. Spread this, please. pic.twitter.com/TJf5e4oUvB
— Михайло Подоляк (@Podolyak_M) April 17, 2022
போப் ஆண்டர் போன்ற தலைவர்கள் ஒன்றிணைந்து, இங்கிருந்து அவர்களை வெளியேற்ற உதவினால் கண்டிப்பாக காப்பாற்ற முடியும். தயவுசெய்து இதைப் பரப்புங்கள் என Mykhailo Podolyak தெரிவித்துள்ளார்.