10 கோடி பயணிகள் கடந்து செல்லும் பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையம்
லண்டன் லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம், பிரித்தானியாவின் மிக பிஸியான ரயில் நிலையமாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
அறிக்கைகளின்படி, 2023-24 ஆண்டில், லிவர்பூல் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் 94.5 மில்லியன் (9.45 கோடி) பயணிகள் நுழைவுகள் மற்றும் வெளியேறல்கள் என்ற சாதனை அடைந்துள்ளது.
2022-23 ஆண்டில் இந்த எண்ணிக்கை 80.4 மில்லியனாக இருந்தது. இதனுடன் ஒப்பிட்டால் இம்முறை 14.1 மில்லியன் பயணிகள் அதிகரித்துள்ளனர்.
Elizabeth line ரயில்களின் அதிகரித்த பயன்பாடே இதற்குக் காரணமாக உள்ளது.
பிரித்தானியாவின் மற்ற முக்கிய ரயில் நிலையங்கள்:
- லண்டன் பேட்டிங்டன்: 66.9 மில்லியன் பயணிகள் (இரண்டாவது இடம்).
- டொட்டன்ஹாம் கோர்ட் ரோடு: 64.2 மில்லியன் பயணிகள் (மூன்றாவது இடம்).
- லண்டன் வாட்டர்லூ: 62.5 மில்லியன் பயணிகள் (நான்காவது இடம்).
மற்ற பிராந்தியங்களின் பங்களிப்பு- லண்டனுக்கு வெளியே:
- பர்மிங்காம் நியூ ஸ்ட்ரீட் (33.3 மில்லியன் பயணிகள்).
- மான்செஸ்டர் பிக்டில்லி (25.8 மில்லியன் பயணிகள்).
- லீட்ஸ் (24.9 மில்லியன் பயணிகள்).
- ஸ்கொட்லாந்து: கிளாஸ்கோ சென்ட்ரல் (25.0 மில்லியன் பயணிகள்).
- வேல்ஸ்: கார்டிஃப் சென்ட்ரல் (11.5 மில்லியன் பயணிகள்).
Denton, கிரேட்டர் மான்செஸ்டர்: 2023-24 ஆண்டில் 54 பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இந்த நிலையம், வாரத்தில் இரண்டு ரயில் சேவைகள் மட்டுமே வழங்குகிறது.
பிரித்தானியாவில் 2023-24 ஆண்டில் 1.61 பில்லியன் ரயில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன, இது முந்தைய ஆண்டில் பதிவான 1.38 பில்லியனை விட 16% அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
London Liverpool Street, Denton, UK's busiest railway station