ரூவாண்டா பயண திட்டத்திற்கான தடை: ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு பிரித்தானிய கண்டனம்!
புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டத்தை ஐரோப்பிய ஸ்ட்ராஸ்பேர்க் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியதை பிரித்தானியா வலுவாக கண்டிக்கிறது என துணைப் பிரதமர் டொமினிக் ராப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடத்தல்காரர்களால் பிரான்சில் இருந்து ஆபத்தான முறையில் பிரித்தானியாவிற்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவிற்கு நாடுகடத்தப்படும் திட்டத்தை பிரித்தானிய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
அந்த அறிவிப்பின் படி கடந்த செவ்வாய் புகலிடக் கோரிக்கையாளர்களை ரூவாண்டா நாட்டிற்கு அனுப்பும் முதல் விமானம் புறப்படவிருந்த நிலையில், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் விதித்த தடை உத்தரவின் அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் முதல் விமானப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
REUTERS
இந்தநிலையில், இன்று மனித உரிமை தொடர்பான ஐரோப்பிய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரித்தானிய துணைப் பிரதமர் டொமினிக் ராப், புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் பிரித்தானியாவின் கொள்கை முடிவில் ஐரோப்பிய நீதிமன்றம் தனது அதிகாரங்களை மீறிவிட்டதாக தெரிவித்தார்.
ரூவாண்ட பயணத்தை தடுத்து நிறுத்திய ஐரோப்பிய நீதிமன்றத்தின் தலையீட்டை கருத்தில் கொண்டு ஐரோப்பிய மனித உரிமை மாநாட்டில் இருந்து பிரித்தானிய முழுவதுமாக வெளியேற வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான டோரி எம்பிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: டாலர்கள் மற்றும் யூரோக்களுக்கு தடை இல்லை: பேங்க் ஆஃப் ரஷ்யா வெளியிட்ட புதிய தகவல்!
ஆனால் மாநாட்டில் பேசிய டொமினிக் ராப் மாநாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணம் பிரித்தானியாவிற்கு இல்லை எனவும் மாநாட்டில் தொடர்ந்து தங்கியிருக்கவே நினைப்பதாகவும், ஸ்ட்ராஸ்பேர்க் நீதிமன்றம் மாநாட்டின் ஒரு பகுதியாக அதன் ஆணையைப் பிரதிபலிப்பதும் உண்மையாக இருப்பதும் முக்கியம்," என்று அவர் பிபிசி தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.