கொரோனாவுக்கு இடையே சீனாவில் களைகட்டும் தொப்புள்கொடி விற்பனை
சீனாவில் சட்டவிரோதமாக தொப்புள்கொடி விற்பனை களைகட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொப்புள்கொடியில் மருத்துவ குணங்கள் அடங்கியிருப்பதாக சீனத்து மக்கள் நம்புகின்றனர். உணவாக சமைத்து சாப்பிடுபவர்களும், அதை பதப்படுத்தி, தூள்ளாக மாற்றி, விற்பனை செய்பவர்களும் சீனாவில் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
காசநோய், நோயெதிர்ப்பு சக்தி குறைவு அல்லது இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு சிறந்தது இந்த தொப்புள்கொடி சிகிச்சை என சீனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் சீன சுகாதாரத்துறை இதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், 2005 முதல் தொப்புள்கொடி விற்பனை என்பது சட்டவிரோதம் எனவும் அறிவித்துள்ளது.
இருப்பினும் இது தொடர்பாக சீன அரசாங்கம் எந்த சட்டத்தையும் இதுவரை உருவாக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
சட்டவிரோத தொப்புள்கொடி வர்த்தகம் முதன்மையாக அன்ஹுயியில் உள்ள போஜோ, ஜியாங்சுவில் பிஷோ மற்றும் ஹெனானில் உள்ள யோங்செங் ஆகிய பகுதிகளில் களைகட்டுவதாக கூறப்படுகிறது.
மருத்துவமனைகள், மருத்துவ கழிவு ஆலைகள் மற்றும் இறுதி சடங்கு இல்லங்களில் இருந்தும் சுமார் 8.80 பவுண்டுகளுக்கு தொப்புள்கொடியை குறிப்பிட்ட வர்த்தகர்கள் வாங்குவதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் இதில் அதிக ஆபத்தும் இருப்பதாக கூறப்படுகிறது. தொற்றுநோய் உள்ளிட்ட காரணங்களால் ஒரு தாயார் இறக்க நேரிட்டால், தொப்புள்கொடியிலும் அந்த கிருமிகள் தொற்றியிருக்கும் என்றே மருத்துவர்களின் கூற்று.
மேலும், பொதுவாக அதை சமைப்பதால் மட்டும் அந்த கிருமிகளை போக்க முடியாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், மருத்துவமனைகளில் கிருமி நீக்கம் செய்ய பயன்படுத்தும் முறையே இதற்கு தீர்வு என்றும், அது குடியிருப்புகளில் சாத்தியமல்ல எனவும் கூறுகின்றனர்.
சீனாவில் கடந்த 25 ஆண்டுகளாக தொப்புகொடி விற்பனை மேற்கொண்டு வரும் ஒருவர், கடந்த ஓராண்டில் மட்டும் 130,000 தொப்புள்கொடிகள் சேகரித்து விற்பனை செய்துள்ளார்.
மட்டுமின்றி, சீனாவில் மருத்துவ உணவாக இணையத்திலும் தொப்புள்கொடி விற்பனை செய்யப்படுகிறது.