உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் முக்கிய முடிவு: ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு
உக்ரைனில் உணவு தானியங்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு இருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் தானிய ஏற்றுமதியில் இருந்த சிக்கல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கியதை அடுத்து உக்ரைனிய துறைமுகங்கள் சுற்றி வளைக்கப்பட்டு கடல் ஏற்றுமதி போக்குவரத்து முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் ஏழை நாடுகளுக்கான உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.
U.N. Secretary General Antonio Guterres said he welcomed an agreement by all parties to extend the Black Sea grain deal to facilitate Ukraine's agricultural exports from its southern Black Sea ports https://t.co/04D7GptzJG pic.twitter.com/r6xYj7m0aX
— Reuters Business (@ReutersBiz) November 17, 2022
இதையடுத்து உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து உக்ரைனிய தானியம் மற்றும் உரங்களை கடல் துறைமுகங்கள் வழியாக எடுத்துச் செல்வதற்கான புதிய ஒப்பந்தத்தை ஜூலை மாதம் ஏற்படுத்தினர்.
இந்த ஒப்பந்தம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்தது இதற்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் உலக நாடுகள் வரை கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்
இந்நிலையில் உக்ரைனில் உணவு தானியங்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டு இருப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
Antonio Guterres-அன்டோனியோ குட்டரெஸ்(Reuters)
இது தொடர்பாக இன்று காலை அவர் வெளியிட்ட அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார், அதில் உக்ரைனில் இருந்து உணவு தானியங்கள் மற்றும் உரங்களை எளிதான முறையில் ஏற்றுமதி செய்வதற்கான கருங்கடல் தானிய ஏற்றுமதி முயற்சியை தொடர அனைத்து தரப்பினரும் ஒப்பந்தம் அளித்து இருப்பதை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக உக்ரைனின் உட்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ், உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் 120 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.