ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க ஐ.நா.வை தூண்டிவிட்டுள்ள பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி
ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முயற்சியை தூண்டிவிட்டுள்ளதாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம், 30 நாட்களில் ஈரான் தனது அணுசக்தி நிலையங்களில் சர்வதேச ஆய்வாளர்களுக்கு அணுமதி வாழங்கவிட்டால், கடுமையான பொருளாதார தனிமைப்படுத்தலுக்கு ஆளாகும்.
2025 அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் (3.67% செறிவூட்டப்பட்ட) 300 கிலோ யுரேனியம் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது 45 மடங்கு அதிகமாகவும், 400 கிலோ அளவிற்கு கணக்கில் இல்லாத உயர் சுத்தமான யுரேனியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
IAEA ஆய்வாளர்கள் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு முக்கிய அணுசக்தி நிலையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். ஈரான் Bushehr நிலையத்திற்கு மட்டும் அனுமதி வாழங்கியுள்ளது.
மூன்று ஐரோப்பிய நாடுகளின் இந்த முடிவை, பிரித்தானிய வெளிவகார அமைச்சர் David Lammy இன்று (ஆகஸ்ட் 28) ஈரானிய வெளிவிவகார துறை அமைச்சர் Abbas Araghchi-யிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது என அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
விளைவுகள்
ஐ.நா. தடைகள் அமுல்படுத்தப்பட்டால், ரஷ்யா மற்றும் சீனாவும் அவற்றை பின்பற்றவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகும் அபாயமும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran nuclear sanctions 2025, UN snapback mechanism Iran, UK France Germany Iran deal, JCPOA violation Iran, IAEA inspectors Iran access, enriched uranium Iran stockpile, Iran non-proliferation treaty, Iran arms embargo UN, David Lammy Iran sanctions, Abbas Araghchi UN response