பாலஸ்தீனியர்களுக்கான உணவு திட்டம் நிறுத்தம்: அதிகாரிகள் வெளியிட்டுள்ள முக்கிய காரணம்
2 லட்சம் பாலஸ்தீனர்யர்களுக்கு உலக உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உணவு உதவி அடுத்த மாதம் முதல் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு உதவி நிறுத்தம்
கிட்டத்தட்ட 60 சதவீத பாலஸ்தீன மக்கள் உலக உணவு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வந்த நிலையில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த உணவு உதவியை அடுத்த மாதம் முதல் நிறுத்தி வைப்பதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவு திட்டத்தின் கீழ் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியில் வறுமையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு ஐ.நா ஒவ்வொருவருக்கும் மாதம் 10.23 டாலர்கள் மதிப்பிலான பண கூப்பன்களும், உணவு உதவியும் வழங்கி வந்தது.
World Food Programme (WFP) suspends food aid to over 200,000 Palestinians from next month due to a "severe" funding shortage@eriknjoka tells you more#Palestine #WestBank #Gaza
— WION (@WIONews) May 8, 2023
For more videos, visit: https://t.co/AXC5qRuO3J pic.twitter.com/911IDmME6t
இதற்கிடையில் காஸாவில் வாழ்ந்து வரும் 23 மில்லியன் மக்களில் 48 சதவீதம் பேர் வேலையின்றி தவித்து வருவதுடன், சர்வதேச உதவியை நாடி 80 சதவீதம் பேர் காத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
வலி மிகுந்த முடிவு
இந்நிலையில் அப்பகுதிக்கான உலக உணவுத் தானிய திட்டத்தின் அதிகாரி சமீர் அப்துல் ஜப்பார் வழங்கிய தகவலில், இத்தகைய வலி மிகுந்த முடிவுகளை நிதி நெருக்கடி காரணமாக எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Reuters