இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க முடியாது... லெபனான் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டம்
லெபனான் தெற்கில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்
ஹிஸ்புல்லா படைகளை ஒழிக்கும் வகையில் லெபனானின் தெற்கில் இருந்து ஐ.நா அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என இஸ்ரேல் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகிறது.
இஸ்ரேல் விவகாரம் காரணமாகவே லெபனானில் சுமார் 50 நாடுகளில் இருந்து அமைதிப்படையினர் லெபனானில் முகாமிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் முடிவை ஆஸ்திரிய வெளிவிவகார அமைச்சர் Alexander Schallenberg வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1ம் திகதி ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கியதன் பின்னர் ஐ.நா அமைதிப்படையினர் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
மட்டுமின்றி அமைதிப்படையினரின் முகாம் ஒன்றில் இஸ்ரேலிய டாங்கிகள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதுவரை அமைதிப்படையினர் ஐவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சமீபத்திய நடவடிக்கைகள்
ஆஸ்திரியா உட்பட 16 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் லெபனான் அமைதிப்படையில் வீரர்களை அனுப்பியுள்ளது. இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளிடையே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமைதிப்படை தொடர்பில் ஞாயிறன்று மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனான ஆலோசனையை அடுத்து,
அமைதிப்படையை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என Alexander Schallenberg உறுதிபட தெரிவித்துள்ளார். லெபனான் அமைதிப்படையில் மொத்தமுள்ள 10,000 பேர்களில் 3,600 பேர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |