உக்ரைன் போரால்... அகதிகளுக்கான ரேசன்கள் பாதியாக குறைப்பு: உலக உணவு திட்டக்குழு அறிவிப்பு
கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகளுக்கான ரேஷன் பொருள்களை ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பு பாதியாக குறைத்துள்ளது.
உக்ரைனில் நடந்து வரும் போர் நடவடிக்கையானது உலகளாவிய அகதிகள் நெருக்கடியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் உணவு பஞ்சத்தின் அளவையும் அதிகரித்துள்ளது.
ஏனெனில் உணவு தானிய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இருநாடுகளுக்கிடையிலான போர் நடவடிக்கையால், உணவு தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, பொருள்களின் விலை அதிகளவு உயர்த்தியுள்ளது.
தேவை அதிகரிப்பு மற்றும் போதிய நிதியின்மை காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அகதிகளுக்கான ரேஷன் பொருள்களை பாதியாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாக ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா திட்டத்தால் ஆதரிக்கப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கால்வாசி அகதிகளின் ரேஷன்களில் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது என WFP கூறியுள்ளது.
அதிலும் எத்தியோப்பியா, கென்யா, தெற்கு சூடான் மற்றும் உகாண்டாவில் உள்ளவர்கள் ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பு(WFP)வெளியிட்டுள்ள அறிவிப்பால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: அமரிக்காவில் அதிகாலை ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு: பொலிஸார் விசாரணை
இதுத் தொடர்பாக WFP நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி பேசுகையில், "எங்களை நம்பியிருக்கும் அகதிகளுக்கான உணவு விகிதத்தை குறைக்கும், இதயத்தை உடைக்கும் முடிவை எடுக்க நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம்" எனத் தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.