உலக பாரம்பரியத் தளங்கள்: UNESCO தரவரிசையில் டாப் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்
உலகின் முக்கிய பாரம்பரிய மற்றும் கலாசார தளங்களை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, UNESCO உலக பாரம்பரியத் தளங்களின் புதிய தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இத்தாலி 60 தளங்களுடன் முதல் இடத்திலும், சீனா 59 தளங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜேர்மனி 54 தளங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
டாப் 10 இடங்களை பிடித்த நாடுகள்
1. இத்தாலி - 60 தளங்கள்
2. சீனா - 59 தளங்கள்
3. ஜேர்மனி - 54 தளங்கள்
4. பிரான்ஸ் - 53 தளங்கள்
5. ஸ்பெயின் - 50 தளங்கள்
6. இந்தியா - 43 தளங்கள்
7. மெக்சிகோ - 35 தளங்கள்
8. பிரித்தானியா - 35 தளங்கள்
9. ரஷ்யா - 32 தளங்கள்
10. இரான் - 28 தளங்கள்
இந்தியாவின் 43 பாரம்பரியத் தளங்கள், தெற்காசியாவிலேயே அதிகமானவை. மெக்சிகோ, பிரித்தானியா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை கொண்டுள்ளன.
பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சி
UNESCO உலக பாரம்பரியத் தளங்கள் என்பது வெறும் பட்டியலில் இடம்பெறுவதற்கான விடயம் அல்ல, ஒரு காலத்தால் அழியாத பாரம்பரியத்தை பாதுகாக்கும் உறுதியும் கூட.
1- இத்தாலி: ரோம், ஃப்ளோரன்ஸ், வெனீஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற நகரங்களுடன், வால்தி ஓர்சியா (Val d'Orcia) போன்ற இயற்கை அழகும் அடங்கும்.
2- சீனா: உலகப் புகழ்பெற்ற சீனப் பெருஞ்சுவர் முதல் வுலிங்யுவான் (Wulingyuan) மலைகள் வரை அழகிய இயற்கை மற்றும் கட்டிடக்கலையை இணைக்கிறது.
3- ஜேர்மனி: செம்மையான பாம்பெர்க் நகரம் முதல் வாடன் கடல்கரை (Wadden Sea) வரை விரிவான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
4- பிரான்ஸ்: Mont-Saint-Michel, புர்கண்டி (Burgundy) வின்யார்டுகள் போன்ற பிரபலமான பாரம்பரியத் தளங்களை கொண்டுள்ளது.
5- ஸ்பெயின்: அல்ஹாம்ப்ரா, சாக்ரடா பமீலியா (Sagrada Familia), மற்றும் கேமினோ டி சாண்டியாகோ (Camino de Santiago) ஆகியவை பாரம்பரிய சிறப்புகளை வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவின் பாரம்பரிய வளர்ச்சி
இந்தியாவில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ராமப்பா கோவில் (Ramappa Temple) மற்றும் தொலபுரி (Dholavira) போன்ற தளங்கள், பாரம்பரியத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன.
வருங்காலத்தில் இந்தியாவின் பாரம்பரியத் தளங்கள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச கலாசார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
UNESCO தரவரிசையில் இந்தியாவின் இடம், அதன் பாரம்பரிய முக்கியத்துவத்தையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. பாரம்பரியத்தை பாதுகாக்கும் வழிகளில் இந்தியா மேலும் முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UNESCO top 10 countries for World Heritage Sites, UNESCO World Heritage Sites