தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெறாமல்.., ஒன்றரை மணிநேரம் பட்ஜெட் உரையாற்றிய நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெறவில்லை.
பட்ஜெட் தாக்கல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 -வது முறை ஆட்சியமைத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7 -வது பட்ஜெட் இதுவாகும்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களை தவிர கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.
தமிழ்நாடு
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
மேலும், ஒன்றரை மணிநேரம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Union Budget 2024: 1 கோடி இளைஞர்களுக்கு Internship உடன் மாதம் ரூ.5000.., பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஆனால், வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக அசாம், இமாச்சல பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படாதது குறித்து தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அதோடு, சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம், தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |