விமானத்தின் அவசரகால கதவை திறந்து வெளியே குதித்த பயணி! அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்ற பயணி ஒருவர் விமான தரையிறக்கத்தின்போது அவசரகால வெளியேற்றத்தைத் திறந்து, இறக்கைக்கு மேல் ஏறி சறுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சான் டியாகோவிலிருந்து போயிங் 737-900 என்ற விமானம் 2478 சிகாகோவின் ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்தச் சம்பவம் நடந்தது.
விமானம் வாயிலை நெருங்கும் போது, அந்த நபர் வரிசை 21-ல் இருந்த ஓவர்விங் வெளியேறும் வழியைத் திறந்து, விமானத்திலிருந்து இறக்கையின் மீது ஏறி, பின்னர் கீழே குதித்தார்.
ஆணுறையில் துளையிட்ட குற்றத்திற்காக பெண்ணுக்கு சிறை தண்டனை! ஜேர்மனியில் வரலாற்று வழக்கு
@fly2ohare guy jumps out of my plane before we get to the gate. @united UA2478 pic.twitter.com/xgxRszkBfH
— MaryEllen Eagelston (@MEEagelston) May 5, 2022
இந்த பொறுப்பற்ற நடத்தைக்காக 57 வயதான Randy Frank Davila சிகாகோ காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டு, ஒரு கிரிமினல் தாக்குதல் குற்றச்சாட்டுக்கு ஆளானார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 27-ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
தலையை வெட்டி பெட்டியில் அனுப்புவோம்: உக்ரைன் பெண்களை மிரட்டிய ரஷ்ய வீரர்கள்
அதே விமானத்தில் பயணித்த மேரிஎல்லன் ஈகல்ஸ்டன், விமானத்தின் அவசர கதவு திறந்திருப்பதைக் காட்டும் ஒரு பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பயணிகள் விமானங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவது இது முதல் முறையல்ல. ஒரு பயணி விமானத்தின் கதவுகளை நடுவானில் திறக்க முயன்றசம்பவமும் நடந்துள்ளது.